திண்டிவனம் நகரில் 27.51 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டு ஒரு வாரமான நிலையில், அரசு மற்றும் தனியார் பஸ்கள் வருகை குறைந்து வெறிச்சோடிக் காணப்படுகிறது. புதிய நிலையத்திற்குள் நுழையாமல், தனியார் பஸ்கள் பழைய நிலையத்திலேயே பயணிகளை ஏற்றி இறக்கி செல்வதால் பயணிகள் ஏமாற்றமடைகின்றனர். அரசு பஸ்கள் மட்டுமே புதிய நிலையத்தை பயன்படுத்துகின்றன. வட்டார போக்குவரத்து அதிகாரிகள் பஸ் உரிமையாளர்களை அழைத்து, புதிய நிலையத்தை பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.