மேல்மலையனுார் அடுத்த நடுக்கிழவம்பூண்டியைச் சேர்ந்தவர் முருகேசன் மகன் செல்வம், 52; முடிதிருத்தும் தொழிலாளி. இவர், நேற்று காலை 9: 50 மணிக்கு ஸ்பிளண்டர் பிளஸ் பைக்கில் அருள்நாடு கூட்ரோடு அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே செஞ்சி நோக்கிச் சென்ற பேஷன் ப்ரோ பைக் மோதியதில் செல்வம் தலையில் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் நேற்று வளத்தி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.