விழுப்புரம் மாவட்டம் அம்மாகுளம் கிராமத்தில் அரசுப் பள்ளி ஆசிரியர் இளங்கோவன் (50) தனது வீட்டில் அழுகிய நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். மூன்று நாட்களாக உறவினர்களின் அழைப்பிற்குப் பதிலளிக்காததால் சந்தேகம் ஏற்பட்டு, வீட்டிற்குச் சென்று பார்த்தபோது அவர் உயிரிழந்திருந்தது தெரியவந்தது. அவரது உடலில் காயங்கள் இருந்ததால், அடித்துக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் வளத்தி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.