விழுப்புரம் வி. ஏ. ஓ நகர் பகுதியில் வசித்து வந்த தெய்வசிகாமணியின் மனைவி வனிதா, நான்கு மாதங்களாகக் கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில், தனது நான்கரை வயது மகள் சிவயரசியைக் கொன்றுவிட்டு தானும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். கணவர் வெளியே சென்றிருந்த நேரத்தில் நடந்த இச்சம்பவத்தில், நான்கு மாதக் கைக்குழந்தை மட்டும் உயிருடன் மீட்கப்பட்டது.