மேல்மலையனூா் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 93. 79 லட்சம்

பிரசித்தி பெற்ற மேல்மலையனூர் அருள்மிகு அங்காளம்மன் கோயில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. கோயில் இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் ஜீவானந்தம், விழுப்புரம் அறநிலையத் துறை உதவி ஆணையர் சக்திவேல், ஆய்வாளர் சங்கீதா ஆகியோர் முன்னிலையில் உண்டியலை திறந்து காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. இந்தப் பணி இரவு நிறைவடைந்த நிலையில், பக்தர்கள் ரூ. 93 லட்சத்து 19 ஆயிரத்து 643 ம்,ஐயும், மற்றும் 270 கிராம் தங்கம், 1, 3051,305 கிராம் வெள்ளி ஆகியவற்றை உண்டியலில் காணிக்கையாகச் செலுத்தியிருந்தனர். இப் பணியின்போது அறங்காவலர் குழு தலைவர் மதியழகன், கண்காணிப்பாளர் பாக்கியலட்சுமி, மேலாளர் மணி, காசாளர் சதீஷ் உள்ளிட்ட கோயில் பணியாளர்கள் உடனிருந்தனர். பாதுகாப்புப் பணியில் மேல்மலையனூர் போலீசார் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி