அறக்கட்டளை நிறுவனர் முருகவேல் தலைமை தாங்கினார். மாநில ஒருங்கிணைப்பாளர் ஜோலாதாஸ், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் அறவாழி, ரமேஷ், அன்பழகன், முன்னிலை வகித்தனர். முகாம் ஒருங்கிணைப்பாளர் ராகவன் வரவேற்றார். முன்னாள் அமைச்சர் மஸ்தான் எம்.எல்.ஏ., முகாமை துவக்கி வைத்தார். சத்தியமங்கலம் வட்டார மருத்துவ அலுவலர் யோகப்பிரியா மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை டாக்டர்கள் சிகிச்சையளித்தனர். ரங்கபூபதி கல்லூரி தலைவர் ரங்கபூபதி, சுகாதாரத்துறை மாவட்ட இணை இயக்குனர் டாக்டர் ரமேஷ்பாபு, ஊராட்சி தலைவர் நீலாவதி, ஒன்றிய கவுன்சிலர் சாவித்திரி, துணை தலைவர் ராஜேஸ்வரி, வழக்கறிஞர் சக்திவேல் கலந்து கொண்டனர். 105 பேர் கண் சிகிச்சையும், 90 பேர் பொது மருத்துவ சிகிச்சையும் பெற்றனர்.
“என் சினிமா வாழ்க்கையை அழிக்க முயன்றனர்”.. கௌதம் மேனன் குற்றச்சாட்டு