இதை தொடர்ந்து, தேவனுார் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கட்டப்பட்டு வரும் உண்டு உறைவிட பள்ளியை ஆய்வு செய்தார். கெங்கபுரத்தில் ஜன்மன் திட்டத்தின் கீழ் இருளர் இன மக்களுக்கு பட்டாவிற்கான ஆணை வழங்கினார். மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் நடத்தும் இயற்கை உள்ளீடு மைய செயல்பாடுகளை கேட்டறிந்தார். மேல்காரணை கிராமத்தில் வடவெட்டி - கீழ்செவலாம்பாடி சாலை சேதமானதால், புதிய சாலை அமைக்க ஆய்வு செய்தார். திண்டிவனம் சப் கலெக்டர் திவ்யான் சு நிகாம், துணை கலெக்டர் பிரேமி, தாசில்தார் தனலட்சுமி, ஒன்றிய சேர்மன் கண்மணி நெடுஞ்செழியன், பி. டி. ஓ. , ஜெய்சங்கர் உடனிருந்தனர்.
'முதலமைச்சருக்கு சட்னியா?.. சாம்பாரா?'.. அண்ணாமலை விமர்சனம்