விழுப்புரம் மாவட்டம், ஒலக்கூர் காவல் ஆய்வாளர் பிரகாஷ், உதவி ஆய்வாளர் சசிகுமார் மற்றும் காவலர்கள், ஓங்கூர் சோதனை சாவடி அருகே வாகனத் தணிக்கையில் இருந்தபோது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருந்ததை கண்டறிந்து குற்றவாளியை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்ததில், அவர் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ராம் (23) என தெரியவந்தது. மேலும் அவரிடம் இருந்து ரூ.4,40,000 மதிப்பிலான, சுமார் 440 கிலோ எடை கொண்ட குட்கா பொருட்கள் மற்றும் கார் ஆகியவற்றை கைப்பற்றி நீதிமன்ற காவலுக்கு அனுப்பிவைத்தனர்.