திண்டிவனம்: வேலை கிடைக்காத விரக்தியில் இளைஞர் தற்கொலை

கடலூர் மாவட்டம் மணவெளி நங்காத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சிவமணி (31), திண்டிவனம் அருகே சிங்கனூர் கிராமத்தில் சித்தி வீட்டில் தங்கி எம்.பி.ஏ. படித்தார். படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காததால் கூலி வேலைக்குச் சென்றார். வேலை தேடியும் கிடைக்காத விரக்தியில் கடந்த 28-ந்தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற அவர், செஞ்சிக் கோட்டை அருகே மரத்தில் தூக்கில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார். இதுகுறித்து செஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி