செஞ்சி வார சந்தையில் 4 கோடிக்கு ஆடுகள் விற்பனை

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் 150 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெறும் வாரச்சந்தையில், பக்ரீத் பண்டிகையையொட்டி நடைபெற்ற சந்தைக்கு இயற்கையான முறையில் வளர்ந்த செஞ்சி பகுதி வெள்ளாடுகள் மற்றும் செம்மறி ஆடுகள் ஆயிரக்கணக்கில் விற்பனைக்கு வந்தன. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் ஆந்திரா, கர்நாடகா போன்ற வெளிமாநிலங்களில் இருந்து வியாபாரிகளும் இஸ்லாமியர்களும் திரண்டு வந்து போட்டி போட்டு ஆடுகளை ஏலம் எடுத்தனர். இதில் ஒரு ஜோடி வெள்ளாடுகள் ரூ. 10,000 முதல் ரூ. 20,000 வரையிலும், செம்மறியாடுகள் ரூ. 20,000 முதல் ரூ. 45,000 வரையிலும் ஏலம் போனது.

தொடர்புடைய செய்தி