விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருகே கப்ளாம்பாடி கிராமத்தில் உளுந்து அறுவடை பணியில் ஈடுபட்டிருந்த விவசாயிகள் மீது மரத்திலிருந்த தேனீக்கள் திடீரென தாக்குதல் நடத்தின. இதில் ஏழுமலை (75) என்ற விவசாயி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வெங்கடேசன் உட்பட மேலும் 5 விவசாயிகள் காயமடைந்து திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து அவலூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.