விழுப்புரம் மாவட்டம் அனந்தபுரம் அடுத்த காரை கிராமத்தைச் சேர்ந்த 80 வயது முதியவர் சீனன், தனது மனைவி ஓராண்டுக்கு முன் இறந்த துயரம் தாங்காமல் வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். மயங்கிய நிலையில் மீட்கப்பட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அதிகாலை உயிரிழந்தார். இது குறித்து அவரது மகன் முருகன் அளித்த புகாரின் பேரில் அனந்தபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.