செஞ்சி அருகே சிலிண்டர் லாரி கவிழ்ந்து விபத்து

செங்கல்பட்டு மாவட்டம் படாளம் பகுதியிலிருந்து 357 சிலிண்டர்கள் ஏற்றிச் சென்ற லாரி, செஞ்சி பெட்ரோல் பங்க் அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. திருவண்ணாமலை நோக்கிச் சென்ற லாரியும், சென்னை நோக்கி வந்த காரும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டது. காரில் இருந்த ஆந்திராவைச் சேர்ந்த ஸ்ரீதேவி குடும்பத்தினர் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினர். செஞ்சி போலீசார் போக்குவரத்தைச் சீர்செய்யும் பணியில் ஈடுபட்டனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி