கோவில் திருவிழாவை யொட்டி, பக்தர்கள், பொதுமக்கள் சாமி தரிசனம் செய்வதற்காக ஊராட்சி ஒன்றியம் சார்பில் அடிப்படை வசதிகள் செய்திடவும், தேவையான பணியாளர்களை பணியமர்த்த வேண்டும். காவல் துறை சார்பில் பாதுகாப்பு நடவடிக்கை செய்திட வேண்டும்.
பஸ் நிலையம், கிராம தெருக்கள், கோவில் வளாகம் உட்பட இதர இடங்களில் திருட்டு, வழிப்பறி, அசம்பாவிதம் நடக்காமல் இருக்க போதியளவு போலீசாரை பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தவேண்டும். ஊஞ்சல் உற்சவம் நடக்கும் நேரத்தில் கோவிலின் ஊஞ்சல் மண்டபம், கிழக்கு மண்டபம் மேற்பகுதியில் யாரும் ஏறாத வகையில் கண்காணிப்பு பணிகளை செய்ய வேண்டும்.
கனரக வாகனங்கள் விழா நாட்களில் செல்லாதபடி கண்காணிக்க வேண்டும். கோவில் வளாகங்களில் தற்காலிக கடைகள் ஏற்படுத்துவதை தடுக்க வேண்டும். மின்வாரியம், மின் வழித்தடங்களை பார்வையிட்டு சரிசெய்திட வேண்டும் என்றார்