செஞ்சியில் குழந்தை ஒழிப்பு தின கையெழுத்து இயக்கம் தொடக்கம்

செஞ்சி செக்கோவர் நிறுவனம் சார்பில் உலக குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, செஞ்சி பஸ் நிலையத்தில் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் நடந்தது. செக்கோவர் இயக்குனர் அம்பிகா சூசைராஜ் தலைமை தாங்கினார். பேரூராட்சி தலைவர் மொக்தியார் அலி துவக்கி வைத்தார். செக்கோர் அலுவலர்கள் ஜெயசீலன், ரவீந்திரன், ராஜாராமன், அஸ்வின், அரசு, அரவிந்த், குலசேகர், சங்கீதா, கோடீஸ்வரி, ராஜசேகர், சிவானந்தன், சக்திவேல், காமாட்சி மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்கள், போலீசார், வருவாய்த்துறையினர், குழந்தைகள் உரிமை பாதுகாப்பு திட்ட அலுவலர்கள், அப்போலோ பாராமெடிக்கல் மாணவிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி