திண்டிவனம் செஞ்சி சாலையில் உள்ள அங்காளம்மன் கோயிலில் இன்று (16ம் தேதி) நடைபெறும் மயானக்கொள்ளை ஊர்வலத்தின் போது அரசியல் கட்சிகளுக்கு இடையே மோதல் ஏற்படுவதைத் தடுக்க பாதுகாப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. டி.எஸ்.பி. பிரகாஷ் தலைமையில் நடந்த கூட்டத்தில், ஊர்வலம் மாலை 5 மணிக்குள் முடிக்கப்பட வேண்டும், கட்சித் தலைவர்களின் போட்டோ ஒட்டிய கத்தி, ஈட்டி, சூலம் கொண்டு வரக்கூடாது என அறிவுறுத்தப்பட்டது. அரசியல் கொடி எடுத்து வந்தால் கைது செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார்.