மேல்மலையனூர்: வீட்டில் மது விற்பனை வீடியோவால் பரபரப்பு

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் வீடுகளில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்யப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையின் துணையுடன் இந்த விற்பனை நடைபெறுகிறதா என்ற சந்தேகத்தை பொதுமக்கள் எழுப்பியுள்ளனர். இதையடுத்து, வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில் மேல்மலையனூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி