விழுப்புரம்: வீட்டிற்குள் புகுந்து ரூ.8 லட்சம் நகை திருட்டு

மேல்மலையனூர் அருகே இரும்புலி கிராமத்தில் ஷாகுல் அமீது மனைவி பர்வீன் வீட்டில், அவர் குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்தபோது மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 8 பவுன் நகை மற்றும் 60 கிராம் வெள்ளிப் பொருட்களை திருடிச் சென்றனர். இதன் மதிப்பு சுமார் ரூ. 8 லட்சம் என கூறப்படுகிறது. இதுகுறித்து பர்வீன் வளத்தி காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி