விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பலம் கூட்டுச்சாலை பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த ஆரோவில் போலீசார், சந்தேகத்தின் பேரில் அய்யப்பன் (21) மற்றும் ரஞ்சித்குமார் (23) ஆகிய இரு வாலிபர்களைப் பிடித்து சோதனை செய்தனர். அவர்களிடம் இருந்து விற்பனைக்காக வைத்திருந்த 25 கிராம் கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.