விழுப்புரம் மாவட்ட அதிமுக அலுவலகச் சாவி எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் ஒப்படைக்கப்பட்டது. தவெகவுக்கு ஆதரவளித்த விவகாரத்தில் இபிஎஸ் - சி.வி.சண்முகம் இடையே பிளவு ஏற்பட்டதால், அலுவலகம் யாருக்கு என்பதில் மோதல் நிலவி வந்தது. இந்நிலையில், சி.வி.சண்முகம் தரப்பினர் சாவியை இபிஎஸ்ஸால் நியமிக்கப்பட்ட புதிய மாவட்ட செயலாளர் பசுபதியிடம் ஒப்படைத்துள்ளனர்.