மறைந்த இயக்குனர் விக்ரம் சுகுமாரனின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய பின், அவருடனான நினைவுகளை இயக்குனர் மாரி செல்வராஜ் சோகத்துடன் பகிர்ந்துகொண்டார். இதுகுறித்து அவர் பேசுகையில், "அண்ணன் எனக்கு நெருங்கிய பழக்கம். தம்பியாக என்னுடன் சினிமா உட்பட பல விஷயங்கள் குறித்து பேசியிருக்கிறார். ஆழமான கதாபாத்திரங்கள் குறித்து அதிகம் விவரிப்பார். அவரின் மரணம் ஈடுசெய்ய இயலாதது. பல நல்ல படைப்புக்களை கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் இருந்தவர். அவரின் படைப்புக்களுக்கு என்றும் போற்றப்படுவார்" என பேசினார்.