கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கப்பட்டு, நிதி மற்றும் சட்ட சிக்கல்களால் நீண்டகாலமாக தள்ளிப்போன நடிகர் விக்ரமின் 'துருவ நட்சத்திரம்' திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளதாக இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் தெரிவித்துள்ளார். சமீபத்திய இது குறித்து பேட்டி ஒன்றில் பேசிய அவர், படத்தை சுற்றியிருந்த அனைத்து பிரச்சனைகளும் பேசி தீர்க்கப்பட்டுவிட்டதாகவும், விரைவில் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்றும் உறுதி அளித்துள்ளார்.