சொன்னதை செயலில் செய்து காட்டியவர் விஜயகாந்த் - சீமான் புகழஞ்சலி

தேமுதிக நிறுவனர் விஜயகாந்தின் 2-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் அவரது நினைவிடத்தில் இன்று (டிச.28) மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விஜயகாந்த் எதையும் வெறும் பேச்சோடு நிறுத்திக்கொள்ளாமல், அவற்றை செயலில் செய்து காட்டியவர் என்று கூறியுள்ளார். தனது நேர்மையான குணத்தாலும், பிறருக்கு உதவும் மனப்பான்மையாலும் தமிழக மக்களின் இதயங்களில் கேப்டன் நீங்கா இடம் பிடித்துள்ளதாக அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.

தொடர்புடைய செய்தி