கடந்த 2024 மக்களவைத் தேர்தலில் விருதுநகரில் மாணிக்கம் தாகூர் வெற்றி பெற்றதை எதிர்த்துத் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்நிலையில், சுமார் 2 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள இவ்வழக்கை நடத்துவதை விட, பொது வாழ்வில் கூடுதல் கவனம் செலுத்த விரும்புவதால் வழக்கைத் திரும்பப் பெறுவதாக அவர் அறிவித்துள்ளார். தேர்தல் வழக்கை வாபஸ் பெறுவதாக அவர் எடுத்துள்ள இந்முடிவு அரசியல் களத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது.
நன்றி: நியூஸ் 18