'விஜய் ஒரு தொகுதியில் கூட வெல்ல மாட்டார்' - பாண்டே

தனித்து நின்றால் தவெக தலைவர் விஜய் ஒரு தொகுதியில் கூட வெல்ல மாட்டார் என்று மூத்த பத்திரிக்கையாளர் ரங்கராஜ் பாண்டே கணித்துள்ளார். சாணக்யா யூடியூப் நேர்காணலில் நேற்று (நவ., 06) பேசிய அவர், 'விஜய் அதிமுக கூட்டணியில் 50 சீட் வாங்கினாலும் 40-ல் வெற்றி பெறுவார். 234 தொகுதியிலும் வேட்பாளரை நிறுத்த விஜய்யால் முடியாது. 50 வேட்பாளர்களுக்கு மேல் பிற கட்சிகளுக்கு போய் விடுவார்கள். விஜய் வெல்ல மாட்டார் என்பது அவருக்குத் தெரியும். அவர் ஒரு நரேட்டிவ் செட் செய்கிறார்' என்று தெரிவித்தார்.

நன்றி: சாணக்யா

தொடர்புடைய செய்தி