நாளை தென் சென்னையில் பரப்புரை செய்கிறார் விஜய்

தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் வரும் ஏப்.23ஆம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில், அனைத்துக் கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறனர். நாளை (ஏப்.21) மாலையுடன் தேர்தல் பரப்புரையும் ரத்து செய்யப்படுகிறது. இந்நிலையில், தவெக தலைவர் விஜய் நாளை, தென் சென்னையில் பரப்புரை மேற்கொள்ளவுள்ளார். அதன்படி சோழிங்கநல்லூர்,வேளச்சேரி,சைதாப்பேட்டை தொகுதியில் ரோடு ஷோ நடத்த திட்டமிட்டுள்ளார். மாலை நந்தனத்தில் நடைபெறும் செயல் வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகிறார்.

தொடர்புடைய செய்தி