கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் தொடர்பாக டெல்லியில் சிபிஐ அதிகாரிகள் நடத்திய விசாரணையில் நேரில் ஆஜரான தவெக தலைவர் விஜய் இன்று (ஜன.13) சென்னை திரும்பினார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் இணை பொதுச்செயலாளர் சி.டி.ஆர். நிர்மல்குமார், கூட்ட நெரிசல் குறித்து தேவையான அனைத்து விளக்கங்களையும் விஜய் அதிகாரிகளிடம் அளித்துள்ளதாக தெரிவித்தார். மேலும், இந்த விசாரணை தொடர்பாக அடுத்த வாரம் மீண்டும் அவர் ஆஜராவார் என்றும் அவர் கூறியுள்ளார்.
நன்றி:PT