சென்னை பனையூர் அலுவலகம் வருகை தந்துள்ள காங்கிரஸ் தலைவர்கள் கிரிஷ் சோடங்கர், செல்வப்பெருந்தகை, பிரவீன் சக்கரவர்த்தி உள்ளிட்டோரை தவெக தலைவர் விஜய் பொன்னாடை அணிவித்து வரவேற்றார். விஜய்க்கு கிரிஷ் சோடங்கர் மலர்க்கொத்து கொடுத்து, காங்கிரஸ் துண்டை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். காங்கிரஸ் அமைச்சரவையில் இடம்கேட்டு ஆதரவு கொடுத்துள்ளது. இந்த சூழலில் யாருக்கு அமைச்சர் பதவி என்பது உள்ளிட்ட அம்சங்கள் குறித்து இரு கட்சி தலைவர்களும் ஆலோசனை நடத்த உள்ளனர்.