தடுப்புகளை தூக்கி எறிந்து கூட்டத்திற்குள் நுழைந்த விஜய் தொண்டர்கள்

தஞ்சாவூர்: செங்கிப்பட்டியில் இன்று (மார்ச். 4) தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக அக்கட்சியின் தலைவர் விஜய், திருச்சியில் இருந்து சாலை வழியாக சென்றார். இதற்கிடையே கூட்டம் நடைபெறும் இடத்தில் ஆயிரக்கணகாக தொண்டர்கள் குவிந்தனர். அப்போது, அங்கிருந்த தொண்டர்கள், தடுப்புகளை தூக்கி எறிந்து கூட்டத்திற்குள் நுழைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உடனடியாக அங்குவந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.

நன்றி: சன்நியூஸ்

தொடர்புடைய செய்தி