தவெக தலைவர் விஜய் தொண்டர்களுக்கு அறிக்கை ஒன்றை X தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் ஆளுங்கட்சியின் விமர்சனங்களுக்கு கடும் பதிலடி கொடுத்துள்ளார். திமுகவின் கடந்த கால நிலைப்பாடுகளை விமர்சித்துள்ள அவர், எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடிக்க நிர்வாகிகள் எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். குறிப்பாக, வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்ப்பது மற்றும் புதிய வாக்காளர்களை ஒருங்கிணைப்பதில் கூடுதல் கவனம் செலுத்துமாறு கட்டளையிட்டுள்ளார்.
நன்றி:News18