தவெக தலைவர் விஜய், சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் இன்று (மார்ச்.4) திருச்சி விமான நிலையம் வந்தடைந்தார். அங்கு அவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்த நிலையில், சிறிது நேரத்தில் தஞ்சாவூரில் நடைபெறவுள்ள அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் அவர் பங்கேற்க உள்ளார். திருச்சி விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக தஞ்சைக்கு புறப்பட்ட அவர், கட்சியின் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து நிர்வாகிகளுடன் விரிவாக ஆலோசனை நடத்த இருக்கிறார்.