"அறிவு இல்லாமல் விஜய் பேசுகிறார்” - திமுக எழிலரசன்

தவெக தலைவர் விஜய், அடிப்படை அறிவு கூட இல்லாமல் சினிமா வசனம் போல் பேசுவதாக திமுக கொள்கைப் பரப்புச்செயலாளர் எழிலரசன் விமர்சித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது, “ஒரு நடிகர் எதையாவது பேசலாம் என்பது போல் பேசக் கூடாது. நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் என்பது போல் பாதியில் சென்றவர் விஜய். நாக்பூரில் எழுதிக் கொடுத்ததை விஜய் பேசிக் கொண்டிருக்கிறார். விஜய்யின் பேச்சை மக்கள் யாரும் ஆமோதிக்க மாட்டார்கள், ஏற்க மாட்டார்கள். அவரது பேச்சு சிறுபிள்ளைத்தனமானது” என்றார்.

நன்றி: NewsTamilTV24x7

தொடர்புடைய செய்தி