விஜே சித்து நடிக்கும் டயங்கரம்: டீசர் அறிவிப்பு

பிரபல யூடியூபர் விஜே சித்து கதாநாயகனாக நடித்து, இயக்கியுள்ள ‘டயங்கரம்’ திரைப்படத்தின் டீசர் நாளை மாலை 3 மணிக்கு வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது. வேல்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்குச் சித்துகுமார் இசையமைத்துள்ளார். நட்டி, காளி வெங்கட், இளவரசு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஏற்கனவே படப்பிடிப்பு முடிவடைந்துவிட்ட நிலையில், சித்துவின் புதிய அவதாரம் அவரது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி

✕
✕