சென்னை: “ஊடகங்களையும் ஊடகவியலாளர்களையும் குறிவைத்து கீழ்த்தரமாக பதிவிட்டுவரும் தவெகவினரை வன்மையாக கண்டிக்கின்றோம்” என சென்னை பத்திரிகையாளர் மன்றம் தெரிவித்துள்ளது. மேலும், “கட்சி வேறுபாடின்றி சமூக வலைதளங்களில் போலியான பக்கங்களை உருவாக்கி, ஒரு கட்சியை சேர்ந்தவர்கள் மற்றொரு கட்சியை விமர்சிப்பது வழக்கமான ஒன்றாக மாறியுள்ளது. தவெக தலைவர் விஜய் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளனர்.