விஜய் முதலமைச்சர் ஆவதே சரியாக இருக்கும் என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னை வேளச்சேரியில் இன்று (மே 7) செய்தியாளர்களிடம் பேசிய அவர், விஜய் பதவியேற்க ஆளுநர் அனுமதிக்க வேண்டும். அவர் வேண்டுமென்றே குழப்பத்தை ஏற்படுத்துகிறார். மக்கள் அளித்த தீர்ப்பின் படி விஜய் முதலமைச்சர் ஆவதே சரி. தமிழ்நாட்டு அரசியலில் மோடி, அமித்ஷா குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர். விஜய்க்கு ஆதரவு தருவது பற்றி ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என கூறினார்.