நடிகர் விஜய் சேதுபதி இன்று (ஜன.16) தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி, அவரின் புதிய படம் தொடர்பான அறிவிப்பை ஒன்றை படக்குழு அறிவித்துள்ளது. பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்திற்கு 'Slum Dog Temple Road' என பெயரிடப்பட்டுள்ளது. இதுதொடர்பான போஸ்டரை வெளியிட்ட படக்குழு, விஜய் சேதுபதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளது. அந்த போஸ்டரில் விஜய் சேதுபதி ஆக்ரோஷமாக ரத்தக்கறை படிந்த கத்தியுடன் பணப்பெட்டிகளுக்கு நடுவில் நிற்கும்படியாக உள்ளது.