முதலமைச்சர் விஜயிடம் இரண்டு முக்கியமான கோரிக்கைகளை நடிகர் விஜய் சேதுபதி முன்வைத்துள்ளார். கமல்ஹாசன் கோரியிருந்தபடி தமிழக அரசு சார்பில் தனி OTT தளம் தொடங்கினால் சினிமாத்துறைக்கு பெரும் பக்கபலமாக இருக்கும் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், தியேட்டர் டிக்கெட் கட்டணங்கள் உயர்த்தப்பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டதால், தற்போதைய விலைவாசி உயர்வுக்கு ஏற்ப திரையரங்கு கட்டணங்களை உயர்த்துவது குறித்து முதலமைச்சர் விஜய் பரிசீலிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
நன்றி: தந்தி