தவெக கல்வி விருது வழங்கும் விழாவில் பேசிய தவெக தலைவர் விஜய், "ஒரு படிப்பில் மட்டும் சாதிக்க வேண்டும் என நினைத்து மன அழுத்தம் கொள்ள வேண்டாம். நீட் மட்டும் தான் உலகமா. அதை தாண்டி பல விஷயங்கள் உள்ளன. உங்கள் வீட்டில் உள்ளவர்களை ஜனநாயக கடமைகளை செய்ய சொல்லுங்கள். ஊழல் செய்யாதவர்களை பார்த்து தேர்ந்தெடுக்க சொல்லுங்கள். பணம் வாங்கி ஓட்டு போட வேண்டாம் என பெற்றோரிடம் சொல்லுங்கள். அடுத்த வருடம் வண்டியா வண்டியா கொள்ளையடித்த பணத்தை கொட்டுவார்கள்" என்றார்.
நன்றி: பாலிமர்