தமிழ்நாட்டில் தேர்தல் நேரத்தை குறிவைத்து மோசடி நடைபெற்று வருகிறது. அந்த வகையில், மத்திய அரசின் ‘ஜன்தன் திட்டத்தில் ரூ.5,000’, ’விஜய் ரூ.1,499 ஆஃபர்', ‘ஜிபே ரிவார்டு’ போன்ற பெயர்களில் சமூக வலைத்தளங்களில் போலி லிங்க் அனுப்பப்படுகின்றன. இதனைப் பயன்படுத்தி மோசடி கும்பல் பணத்தை திருடி வருகின்றன. இதனால், சைபர் கிரைம் போலீசார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். ‘தேவையற்ற லிங்க்குகளை தொடவேண்டாம்’ என அறிவுறுத்தியுள்ளனர்.