வேலூர் மாவட்டத்தில் பிப்ரவரி மாதம் கடைசி வாரத்தில் தவெக தலைவர் விஜய் பங்கேற்கும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இநத பொதுக்கூட்டத்துக்கு மாவட்ட காவல்துறை அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வேலூர் அடுத்துள்ள அகரம்சேரியில் சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையையொட்டி, பிரமாண்டமான மைதானம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 25,000 பேர் கலந்துகொள்ளும் வகையில் அந்த இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.