50 வயதிற்கு பிறகும் இளமையாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்க, சரியான உணவு பழக்கத்தை பின்பற்றுவது அவசியம். ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த டார்க் சாக்லேட் மற்றும் பழங்கள், ஒமேகா-3 சத்துடைய மீன்கள், ஆரோக்கியமான கொழுப்புகள், வைட்டமின்கள் நிறைந்த கீரைகள் மற்றும் போதுமான நீர்ச்சத்து ஆகியவற்றைத் தினசரி உணவில் சேர்ப்பது நல்லது. இந்த உணவுகள் செல்களை பாதுகாத்து, மூளையின் செயல்பாட்டையும், சருமத்தின் பொலிவையும் மேம்படுத்தி, வயதாவதை தாமதப்படுத்த உதவுகின்றன.