சென்னையில் இன்று (நவ.5) நடைபெற்ற தவெக பொதுக்குழுவில் 2,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். சிறப்பு அழைப்பாளராக விஜய்யின் தாயார் ஷோபா கலந்து கொண்டார். புதுக்கோட்டையைச் சேர்ந்த பெண் நிர்வாகி ஒருவர் தனது கைக்குழந்தையுடன் வந்திருந்தார். கூட்டம் முடிந்தபின், விஜயிடம் குழந்தைக்கு பெயர் சூட்டுமாறு கேட்டுக்கொண்டார். விஜய், குழந்தைக்கு “மோஷிதா” என பெயர் வைத்தார். இதனால் தாய் மற்றும் உறவினர்கள் மகிழ்ச்சி அடைந்து விஜய்க்கு நன்றி தெரிவித்தனர்.