விஜய்யின் 'ஜன நாயகன்' டிரெய்லர் வெளியீடு: ரசிகர்கள் உற்சாகம்

நடிகர் விஜய்யின் 'ஜன நாயகன்' திரைப்படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகியுள்ளது. ஹெச்.வினோத் இயக்கத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜு உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படம் வரும் 9ஆம் தேதி பொங்கல் விடுமுறையை முன்னிட்டு வெளியாகவுள்ளது. அரசியல் பிரவேசம் காரணமாக விஜய்யின் கடைசி படமாக ஜன நாயகன் அறிவிக்கப்பட்டுள்ளதால், ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். யூடியூபில் வெளியான சில மணி நேரங்களில் பல மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்தி