தரணி இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த 2004-ம் ஆண்டு வெளியான 'கில்லி' திரைப்படம் பிப்.20-ம் தேதி மீண்டும் ரீ-ரிலீஸ் ஆகிறது. கடந்த ஆண்டு மறுவெளியீடு செய்யப்பட்டபோது ரூ.50 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து சாதனை படைத்த இத்திரைப்படம், தற்போது 'ஜன நாயகன்' படத்தின் வெளியீடு தள்ளிப்போவதால் மீண்டும் திரைக்கு வருகிறது. பெரிய படங்கள் இல்லாத நிலையில், இந்த மறுவெளியீடு திரையரங்குகளுக்கு நல்ல வசூலை தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.