தமிழகத்தின் புதிய முதலமைச்சராக பொறுப்பேற்கவுள்ள தவெக தலைவர் விஜய், மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து பேருந்துகளிலும் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் 'வெற்றி பேருந்து' திட்டத்தில் தனது முதல் கையெழுத்தை இடப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த திட்டம், தவெக ஆட்சியின் முதல் முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.