கோவையைச் சேர்ந்த வைஷ்ணவி, தமிழக வெற்றிக் கழகத்தில் இருந்து விலகி சில மாதங்களுக்கு முன்பு திமுகவில் இணைந்தார். தொடர்ந்து அவர் சமூக வலைதளங்களில் தவெக மற்றும் அதன் நிர்வாகிகள் குறித்து விமர்சித்து வந்தார். இந்த சூழலில் வைஷ்ணவியின் புகைப்படத்துடன் சர்ச்சைக்குரிய வீடியோவை வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பிரபலமான கார்த்திக் மீது, தகவல் தொழில்நுட்ப சட்டம், பெண்கள் வன்கொடுமை சட்டம், உள்ளிட்ட 6 பிரிவுகளில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.