எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் 'ஜனநாயகன்' படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தின் விநியோக உரிமை தொடர்பாக அவர் அதிரடி முடிவை எடுத்துள்ளார். அதன்படி, விநியோக உரிமையினை கைப்பற்றும் நிறுவனத்துக்கு எந்தவொரு அரசியல் பின்புலமும் இருக்கக் கூடாது என்று அவர் முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது. தமிழக வெளியீட்டு உரிமை மட்டுமின்றி இதர மாநில உரிமைகளும் இதே பாணியில் தான் கொடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.