விஜய் பரப்புரை.. அரங்கத்தில் வைத்து மக்களைச் சந்திக்க திட்டம்

தவெக தலைவர் விஜய், மீண்டும் பரப்புரையை தொடங்கவுள்ள நிலையில், மாவட்ட வாரியாக உள் அரங்குகளில் மக்கள் சந்திப்பை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரோட் ஷோக்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கும் வழக்கு நிலுவையில் உள்ளதால் புதிய முடிவு எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. 11 மாவட்டங்களில் மக்கள் சந்திப்பிற்கான திட்டத்தை தவெக தயாரித்து விட்டதாகவும் தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்து இன்று (நவ.22) மாலை அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது.

நன்றி: NewsTamilTV24x7

தொடர்புடைய செய்தி