குஜராத்: அகமதாபாத் விமான விபத்தில் பலியான குஜராத் முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானியின் உடலுக்கு இன்று மாலை இறுதிச் சடங்கு நடைபெறவுள்ளது. நேற்று (ஜூன் 15) நடந்த டிஎன்ஏ பரிசோதனையில் ரூபானியின் உடல் அடையாளம் காணப்பட்டது. இதையடுத்து, இன்று (ஜூன் 16) ரூபானியின் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டு, ராஜ்கோட்டுக்கு எடுத்து செல்லப்பட்டு அஞ்சலிக்கு வைக்கப்படுகிறது. இதையொட்டி, குஜராத்தில் இன்று ஒருநாள் துக்கம் கடைபிடிக்கப்படுகிறது.