ஆர்மேக்ஸ் மீடியா வெளியிட்ட இந்தியாவின் பிரபலமான நடிகர்கள் பட்டியலில் விஜய் 4-வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார். கடந்த மார்ச் மாதப் பட்டியலில் முதலிடத்தில் இருந்த அவர், தற்போது தீவிர அரசியலில் ஈடுபட்டு வருவதால் சினிமாவில் அவரது செல்வாக்குச் சரிந்துள்ளதாகக் கூறப்படுகிறது. தற்போதைய புதிய பட்டியலில் நடிகர் பிரபாஸ் முதலிடத்தைப் பிடித்துள்ளார். ஷாருக்கான் மற்றும் அல்லு அர்ஜுன் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களைப் பெற்றுள்ளனர்.